“சிறுவர், சிறுமியர் மீது மட்டும் ஈர்ப்பு!”.. 30 ஆண்டு சிறையில் இருந்த புட் பால் கோச்... மீண்டும் அதிரவைத்த திருப்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் சிறுவர் சிறுமியர் மீது ஈர்ப்பு கொண்டு தகாத பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர் முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் Barry Bennell.

சிறுவர்கள், சிறுமியர் என இருபாலின சிறார் மீதும் 1979 முதல் 1988 வரை இவர் தகாத பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக Barry Bennell மீது எழுந்த புகார்களை அடுத்து இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை செய்யப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு 50 குற்றங்களில் ஈடுபட்டதாக இவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி, சிறை தண்டனையை அனுபவித்து வந்த இவர் மீது தற்போது 11 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளிடம் மோசமாக நடந்துகொண்டதாக மேலும் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிரவைத்துள்ளது. தற்போது 66 வயதாகும் இவர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்ற விசாரணை வீடியோ அழைப்பின் மூலம் அண்மையில் நடந்தது. அதில், தமது குற்றங்களை Barry Bennell ஒப்புக்கொண்டதால், இவ்வழக்கு அக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
