"இதுதான் சமயம்..." "இப்ப விட்டா அப்புறம் முடியாது..." 'சிறைக்கைதிகள்' போட்ட 'பக்கா பிளான்...' கடந்த 'வெள்ளி இரவு' நிகழ்ந்த 'பயங்கரம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 31, 2020 10:06 PM

ஈரானில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு காவலர்களை தாக்கிவிட்டு சிறையை உடைத்து 54 கைதிகள் தலைமறைவாகி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

54 prisoners Attack on guards and escape from jail

ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சகேஸ் நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு கொலை உள்ளிட்ட பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஏராளமானோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறையில் சிறைக்காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கைதிகள் சிலர் திடீர் வன்முறை யில் ஈடுபட்டனர். பணியிலிருந்த காவலர்களையும் கடுமையாகத் தாக்கினர். ஒரு கட்டத்துக்கு மேல் கலவரம் கட்டுக்கடங்காமல் போக, கைதிகள் சிறையை உடைத்து தப்பியோடினர்.

இப்படி 74 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர். இதையடுத்து, கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில் 20 கைதிகள் மீண்டும் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனினும் மற்ற 54 கைதிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதிகள் சிறையை உடைத்து தப்பிச் சென்ற விவகாரத்தில் சிறைக்காவலர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 4 சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : #IRAN #JAIL #PRISONERS #54 PRISONERS #ESCAPED