“புது காதலனுக்கு கிஃப்டா கொடுக்குற?”.. கர்ப்பமாக இருந்த முன்னாள் காதலியை 21 முறை குத்திய நபர்!.. வயிற்றில் இருந்த சிசுவுக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனில் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த தனது முன்னாள் காதலி, புதிய காதலில் விழுந்ததை அறிந்து ஆத்திரமடைந்த இளைஞர் அவரை 21 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.

லண்டனில் கெல்லி என்கிற பெண் தன்னுடைய புது காதலனுக்கு பரிசு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதை அறிந்த அவருடைய முன்னாள் காதலன் ஆரோன் என்கிற 26 வயது நபர் கோபத்தில் அவருடைய படுக்கையறைக்குள் நுழைந்து 21 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை பிரசவ காலத்திற்கு இன்னும் 7 வாரம் இருக்கும் நிலையிலேயே, குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளார்கள் மருத்துவர்கள்.
குழந்தையின் தாய் கெல்லி, உயிரிழப்பதற்கு முன்பு குழந்தைக்கு ரைலி என்கிற பெயரை வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார். ஆனால் 4 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து ஆதாரங்களின் அடிப்படையில் ஆரோனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனைக்குப் பிறகு நீதிபதியை பார்த்து கைகளை உயர்த்தி தம்ப்ஸ் அப் காட்டிவிட்டு சிறைக்குள் சென்ற அவரை பார்த்து கெல்லியின் குடும்பத்தினர் கதறி அழ, கெல்லியில் சகோதரி ஒருவர், “உனக்கு சிறைக்குள் நல்ல நேரம் கிடைக்கும்.. குழந்தைக் கொலைகாரா!” என்று கத்தினார்.

மற்ற செய்திகள்
