அங்க போய் ஏன்டா ஏறுன...? புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்... பிரபல யூடியூப் பதிவருக்கு நேர்ந்த கதி...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 22, 2020 12:43 PM

உலக அதிசயமான எகிப்து பிரமிடு மீது ஏறிய காரணத்தினால் ரஷ்ய யூடியூப் பிரபலம் ஒருவருக்கு ஐந்து நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Five days in jail for Russian YouTube celebrity

ரஷ்யாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி என்பவர் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விட்டலியை 3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இவர் தனது குறும்புத்தனமான செயல்களாலும், சாகச நிகழ்வுகளாலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். சமீபத்தில் எகிப்து நாட்டில் உள்ள கிசா பிரமிடுகள் வளாகத்தில் உள்ள ஒரு பிரமிடின் உச்சி மீது தான் நிற்கும் ஒரு புகைப்படத்தை விட்டலி பதிவிட்டார். இதற்காக அவருக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த புகைப்படத்தின் அடிக்குறிப்பில், கடந்த 5 நாட்கள் எகிப்து சிறையில் இருந்தது மிகவும் மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.  இதுபோல் வேறு யாரும் செய்வதை தான் விரும்பவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எகிப்து தேசத்தை நான் விரும்புகிறேன். எகிப்து தேசத்தை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை  என விளக்கம் அளித்துள்ளார். ஆஸ்திரேலிய காட்டுத்தீ மற்றும் உலக நாடுகளிடையேயான போர் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே தாம் விரும்பியதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.  சுமார் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

Tags : #RUSSIAN #YOU TUBE CELEBRITY #EGYPT #PYRAMID #JAIL