'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல கன்ஃபார்ம் பண்ணிடுவாங்க...' சரக்குன்னு நினைத்து சானிடைசர் குடிச்சுருக்கார்...' சிறையில் நடந்த பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 27, 2020 04:04 PM

கேரளாவில் சரக்கு பாட்டில் என நினைத்து சிறையில் வைக்கப்பட்டிருந்த சானிட்டைசரைக் குடித்து உயிரிழந்துள்ளார் கைதி ராமன் குட்டி  .

a prisoner who drank the sanitizer was thought to be alcohol

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறையில் திருட்டு வழக்கில் கைதாகி ராமன்குட்டி என்பவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். புதன்கிழமை காலை ராமன்குட்டி வழக்கம்போல தனது பணிகளைப் பார்த்து வந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "சிறையில்  ஆல்கஹால் சேர்த்து தயாரிக்கப்பட்ட சானிடைசரை மது என நினைத்து  குடித்திருக்கிறார்" என மூத்த சிறை அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் பிரேதப்பரிசோதனை முடிந்த பிறகே அவர் எப்படி உயிரிழந்தார் என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #SANITIZER #JAIL