"உன்ன தலையில தூக்கி வச்சு கொண்டாடினோமே... எங்க குடும்பத்தையே சிதைச்சிட்டியே டா!'.. காமக் கொடூரனை பழிதீர்க்க குற்றவாளி 'அவதாரம்'!.. பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉடன் பிறந்த சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி சிறையில் இருப்பதால் அவனை கொலை செய்வதற்காக, வேறொரு கொலையைச் செய்து சிறைக்கு சென்ற சகோதரரின் அனுபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![tihar jail accused kills rapist who vandalised his sister\'s life tihar jail accused kills rapist who vandalised his sister\'s life](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/tihar-jail-accused-kills-rapist-who-vandalised-his-sisters-life.jpg)
கடந்த திங்கட்கிழமை அன்று, 21 வயது நிரம்பிய ஜாகிர், முகம்மது மெஹ்தாப் (27)- ஐ திகார் சிறையில் கொலை செய்துள்ளார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
நீண்ட காலமாக ஜாகிர் குடும்பமும், மெஹ்தாபும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், குடும்பத்தாரின் நம்பிக்கையை சீரழிக்கும் வகையில், ஜாகிரின் சகோதரியை மெஹ்தாப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதனால் மனமுடைந்த ஜாகிரின் சகோதரி, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது ஜாகிரின் மனதில் ஆறாத வடுவாக இருந்துள்ளது. தனது சகோதரியின் வாழ்க்கையை பாழாக்கிய மெஹ்தாபை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார், ஜாகிர். ஆனால், மெஹ்தாப் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். எப்பாடு பட்டாவது மெஹ்தாபை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, வேறொரு கொலையைச் செய்து திகார் சிறைக்குள் ஜாகிர் நுழைகிறார்.
எனினும், மெஹ்தாபிடம் நெருங்க முடியாத தொலைவில், சிறையின் மற்றொரு பகுதியில் ஜாகிர் அடைக்கப்படுகிறார். தன்னுடைய சிறைவாசிகளிடம் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு, தன்னை சிறை அதிகாரிகள் மெஹ்தாப் செல்லுக்கு அருகில் மாற்றும் வரை போராடுகிறார். இறுதியாக, அந்த வாய்ப்பு ஜாகிருக்கு கிட்டியது. சமயம் பார்த்து காத்திருந்த ஜாகிர், பக்காவாக ஒரு திட்டத்தை தீட்டி, ஜூன் 29 அன்று மெஹ்தாபை சிறையிலேயே வைத்து படுகொலை செய்துள்ளார்.
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அறிந்த காவலர்கள் அரண்டு போயுள்ளனர். மேலும், இச்சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)