“அடேய்!.. இத வெச்சுகிட்டாடா இவ்ளோ தூரம் வந்த?”.. 'சாலையில்' காரை 'ஓட்டிச்சென்ற' 5 வயது 'சிறுவன்'!.. 'போலீஸாரை' அதிரவைத்த 'காரணம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தனக்கு சொந்தமான லம்போர்கினி கார் வாங்குவதற்காக 3 டாலர் பணத்துடன், 5 வயது சிறுவன் ஒருவன் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் சென்ற சம்பவம் போலீசாரை மிரள வைத்துள்ளது.
அமெரிக்காவில் பரப்பரப்பான உட்டா நெடுஞ்சாலையில் மெதுவாக சென்றுகொண்டிருந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் போலீசார் நிறுத்தி அருகில் சென்று பார்த்தபோது அந்த காரை 5 வயது சிறுவன் ஓட்டி வந்ததைக் கண்டு அதிர்ந்தனர். மேற்கொண்டு விசாரித்ததில் தனக்கு வெகு நாட்களாக சொந்தமாக ஒரு லம்போர்கினி கார் வாங்கி தரச்சொல்லி தனது தாயிடம் கேட்டதாகவும், அதற்கு தனது தாய் மறுத்ததாகவும் பின்னர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.
மேலும் 3 டாலர்களுடன் கலிபோர்னியாவுக்கு சென்றுகொண்டிருந்த அந்த 5 வயது சிறுவன், அந்த பணத்தில் தனக்கு சொந்தமாக ஒரு லம்போர்கினி கார் வாங்குவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அப்படி செல்லும் வழியில்தான் போலீஸார் தன்னை தடுத்து நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளான். இதனை வீடியோவாக பதிவு செய்த போலீஸார் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.