"ஒன்னும் அவசரம் இல்ல.. பொறுமையா சாப்பிடு!".. குரங்குக்கு வாழைப்பழம் ஊட்டிவிடும் காவலர்... நெகிழ வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 20, 2020 08:02 AM

கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் பரவியதை அடுத்து இந்தியா முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை தவிர்த்து மக்கள் வேறு எதற்கும் வெளியே வராத நிலை ஏற்பட்டுள்ளது.

police man feeds banana to monkey videoviral

இந்த ஊரடங்கிலும் அயராது பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள் காவல்துறையினர் தான். இந்த சூழலில் காவல் துறையினர் தங்கள் காவல் பணிகளையும் மீறி நெகிழ வைக்கும், இதயம் தொடும் பல நல்ல காரியங்களை செய்து பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் காக்கைக்கு ஒரு காவலர் உணவளித்த சம்பவம் அண்மையில் வைரலானது.

இதேபோல் தற்போது குரங்கு ஒன்றுக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிடும் போலீசாரின் வீடியோ வைரலாகியுள்ளது. வடமாநிலத்தில் காவலர் ஒருவர் மாஸ்க் அணிந்துகொண்டு போன் பேசிக்கொண்டே வாழைப்பழத்தை, கையில்லா குரங்கு ஒன்றுக்கு ஊட்டிவிடுகிறார். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.