'கல்யாணம்' முடிஞ்ச கையோட... 'மாப்பிள்ளையை' அழைத்துச் சென்ற 'அதிகாரிகள்'... 'பரிசோதனை' முடிவால் பிரிந்த 'புது ஜோடி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஷெரீஃப். இவருக்கும், விருதுநகரை சேர்ந்த நசீமா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விருதுநகரில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததையடுத்து, சென்னையில் இருந்து ஷெரீஃப் மற்றும் குடும்பத்தினர் இ பாஸ் வாங்கிக் கொண்டு விருதுநகர் சென்றுள்ளனர். அப்போது விருதுநகர் மாவட்ட எல்லையில் ஷெரீஃப்பிற்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கும் நசீமாவிற்கும் நிச்சயிக்கப்பட்ட படி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில மணித்துளிகளிலேயே, அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஷெரிஃப்பிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் அவரை மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என கூறி அழைத்து சென்றனர். இதனால் மணமக்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
