தமிழகத்தின்... ஒரே 'பேருந்து' பணிமனையில்... 'ஐந்து' நடத்துனர்களுக்கு உறுதியான 'கொரோனா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்ட ஊரடங்கில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவுள்ள பகுதிகளில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது.

அதே போல கடந்த சில தினங்களுக்கு தமிழகத்தில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளில் குறைந்த பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பேருந்து பணிமனையில் பணிபுரியும் நடத்துனர்கள் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் ஐந்து நடத்துனர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்யாறு அரசு பேருந்து பணிமனை மூடப்பட்டுள்ளது. அதே பல அடுத்த 3 நாட்களுக்கு பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
