என்ன கொடுமை இது?..சொந்த 'கல்யாணத்துக்கே'..லேட்டா போன மாப்பிள்ளை!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Sep 25, 2019 08:47 PM
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய திருமணம் குறித்த நிகழ்வுகள் என்றுமே மனதில் பசுமையாக இருக்கும்.ஒருசில பிரச்சினைகள் இருந்தாலும் பின்னாளில் அதுவும் காமெடியாகவே மாறிவிடும்.ஆனால் சீனாவில் உள்ள மாப்பிள்ளை சொந்த கல்யாணத்துக்கே லேட்டாக சென்றுள்ளார்.
சீனாவின் வழக்கப்படி மாப்பிள்ளை சென்று கைபிடித்து திருமணத்திற்கு அழைத்து போக வேண்டும்.அதன்படி சீனாவின் கெயிலான்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஜாங் என்பவர் தன்னுடைய திருமணத்தன்று மணமகள் தங்கியிருந்த அறைக்கு லிப்டில் சென்றுள்ளார்.அப்போது லிப்ட் திடீரென பாதியில் நின்றுவிட்டது.
மறுபுறம் மாப்பிள்ளை லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெண்ணுக்கும் தெரியவர, அவரும் பதட்டத்துடன் காத்திருந்திருக்கிறார்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 1 மணி நேரம் போராடி மாப்பிள்ளையை லிப்டுக்குள் இருந்து மீட்டுள்ளனர்.அதன்பிறகு இருவருக்கும் 1 மணி நேரம் கழித்து திருமணம் நடைபெற்றுள்ளது.
இனிமே அந்த மாப்பிள்ளை லிப்ட்ல போவாரு..!