ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் விலையில் 50% டிஸ்கவுண்ட் ..? சென்னை மெட்ரோவின் புதிய திட்டம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Sep 30, 2019 10:42 AM
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்க சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்சேவை, வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், விரைவான போக்குவரத்து வசதிக்காவும் கொண்டு வரப்பட்டது. இதில் வார நாட்களில், நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிமான பயணிகள் பயணிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விடுமுறை நாட்களில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மட்டுமே பயணிப்பதாக கூறப்படுகிறது. அதனால் விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு டிக்கெட் கட்டணத்தில் சலுகை கொண்டு வர மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் விடுமுறை தினங்களிலும் இந்த சலுகையை அளிக்கலாம என மெட்ரோ நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பின்பற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.