'முதுகில் இருந்ததைக் கவனிக்காமல்’... 'அப்படியே போடப்பட்ட தையல்’... 'இளைஞரை பதறவைத்த சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 19, 2019 01:34 PM

கத்தி குத்துடன் வந்தவருக்கு, முதுகில் கத்தி உள்ளே இருப்பது தெரியாமலேயே, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The knife in the back was sewing without knowing

கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த பாரதி என்பருக்கும்,  பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, இருவருக்கும் நடந்த மோதலில் பாரதியை, ஜானகிராமன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் முதுகில் கத்தி குத்து விழுந்த பாரதி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, கத்திக்குத்து பட்ட இடத்தில் தையலும் போடப்பட்டது. ஆனால் வலி பொறுக்க முடியாமல் பாரதி, கதறித் துடித்தார்.

இந்நிலையில், அவரது முதுகுப் பகுதியை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர்.  அதில், கத்தியின் உடைந்த துண்டு, முதுகுப் பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்த இளைஞரும், அவரது உறவினர்களும் பதறிப்போயினர். இதனையடுத்து, பாரதி உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம், முதுகில் இருந்த உடைந்த கத்தித் துண்டு அகற்றப்பட்டது. கத்தி முதுகில் இருந்தது கூட தெரியாமல், மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DOCTORS #KNIFE #SEWING