இஸ்லாமிய மதபோதகர் ‘இறுதி சடங்கில்’ குவிந்த லட்சக்கணக்கான மக்கள்.. ‘கேள்விக்குறியான’ ஊரடங்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 21, 2020 10:58 AM

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இஸ்லாமிய மதபோதகரின் இறுதி சடங்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100,000 gather for funeral in Bangladesh, defying lockdown

வங்கதேசத்தில் தற்போதுவரை கொரோனா தொற்றால் 2,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 91 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கதேச இஸ்லாமிய அமைப்பின் தலைவரும், மதபோதகருமான மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், அவரின் இறுதி சடங்கு தொழுகைக்கு 5 பேருக்கு மேல் வரக்கூடாது என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் ஊரடங்கை மீறி சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். பிரக்மன்பாரியா மாவட்டத்தின் சாலைகளில் மக்கள் அதிகளவில் கூடியதால் அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்ப்ட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், வங்கதேசத்தில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி சடங்கில் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.