‘பிரபல’ வங்கியின் ஏடிம்மில்... ‘100 ரூபாய்க்கு’ பதிலாக வந்த ‘500 ரூபாய்’ நோட்டுகள்... ‘வாடிக்கையாளர்கள்’ செய்த காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Jan 11, 2020 07:51 PM
கனரா வங்கி ஏடிஎம் ஒன்றில் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மடிகேரி என்ற ஊரில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் ஒன்று 100 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளது. அந்த குறிப்பிட்ட ஏடிஎம்மிற்கு பணத்தை நிரப்பும் வேலை செய்யும் ஏஜென்ஸி தவறுதலாக இயந்திரத்தில் 100 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகளை நிரப்பியதாலேயே இப்படி நடந்துள்ளது.
அந்த குறிப்பிட்ட ஏடிஎம்மில் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டபோது வாடிக்கையாளர்கள் மொத்தமாக ரூ 1.7 லட்சத்தைப் பெற்றுச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் வங்கிக்கு தெரியவர, அவர்கள் போலீசாரை அணுகாமல் தாங்களே அந்தப் பணத்தை மீட்க முயற்சித்துள்ளனர். அது முடியாமல் போக பின்னரே அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தவறுதலாக அதிக பணத்தை பெற்றுச் சென்ற வாடிக்கையாளர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.