“எங்க ஏடிஎம்ல பணத்த எடுக்க”.. “டெபிட் கார்டே தேவையில்ல!”.. “பிரபல வங்கியின் அதிரடி வசதி!”

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 22, 2020 11:13 AM

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் படம் எடுக்கும் வசதியை ICICI வங்கி முகம் செய்துள்ளது

popular Bank introduces cardless cash withdrawal in their ATM

ஐ-மொபைல் செயலியைப் பயன்படுத்தி, ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று ஐசிஐசிஐ வெளியிட்டுள்ள புதிய செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி, நாடு முழுவதும் உள்ள தங்களுடைய 15 ஆயிரம் ஏடிஎம்களில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

டெபிட் கார்டினை எடுத்து வருவதற்கு மறந்துவிடுபவர்களுக்கும், அல்லது எப்போதுமே டெபிட் கார்டு பயன்படுத்துவதை சிக்கலாகவும் ஆபத்தாகவும் உணர்பவர்களுக்கும், பணத்தை எளிமையாக எடுத்துக் கொள்ள இந்த வசதி உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  எப்படி பணம் எடுக்க வேண்டும்? என்பதையும் பார்க்கலாம்.

எப்படி பணம் எடுக்க வேண்டும்?

1) வங்கி பயனர்கள் இந்த வசதியை பெறவேண்டுமானால் தங்களது செல்போனில் ஐசிஐசிஐ-யின் மொபைல் செயலியான ஐ-மொபைல் என்கிற செயலியை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

2) பின்னர் அந்த செயலுக்கு சென்று Service ஆப்ஷனை தேர்வு செய்து Cash withdrawal at ICICI Bank ATM ஐசிஐசிஐ பேங்க் ஏடிஎம் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3) பின்னர் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட வேண்டும். பின்னர் வங்கிக் கணக்கை தேர்வுசெய்து தற்காலிக நான்கு இலக்க எண் ஒன்றை கொடுக்கவேண்டும் அதை கொடுத்து Submit  செய்தவுடன் செல்போனுக்கு ஒரு OTP வரும்.

4) ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில்,  Cardless Cash withdrawal-ஐ தேர்வு செய்து செல்போன் எண்ணை பதிவிட்டால் செல்போனுக்கு ஒரு OTP வரும்.

5) முன்னதாக ஏற்கனவே பதிவிட்டு இருந்த தற்காலிக நான்கு இலக்க எண்ணை அங்கு பதிவிட்டு, பின்னர் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

Tags : #ICICI #BANK #ATM #CARDLESS CASH WITHDRAWAL