‘ஏன் சரியா வரலனு கேட்ட’... ‘உயர் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னை’யில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 27, 2019 11:44 AM

சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில், அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதலில், ராணுவ உயர் அதிகாரி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

army havildar shoot by rifleman and killed himself in chennai

சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. சென்னை ராணுவ அலுவலர் அகடாமியில் பணியாற்றி வருபவர்கள் இங்கே தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருக்கும் ஹவில்தாராக உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் ஜோஸிக்கும், ரைபிள் மேன் ஜெகஷீருக்கும் தகராறு இருந்துள்ளது. ஜெகஷீர் ஒழுங்காக பணிக்கு வரவில்லை என்பதால், பிரவீன் குமார் கண்டித்ததாகவும் அது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரவீன் குமார் ஜோஸியை, ஜெகஷீர் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராணுவ உயரதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #CHENNAI