'காதலியின் மகள்களைக் கொன்று'.. 'பிரேதங்களுடன் உறவு'.. ஸ்வீட் மாஸ்டருக்கு 4 ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 27, 2019 06:19 PM

கடந்த 2016-ஆம் ஆண்டு ராயப்பேட்டை  பழைய போலீஸ் ஸ்டேஷனின் பின்புறத்தில் இருந்த பாண்டியம்மாளும், அவரது 3 மகள்களும் பூட்டிய வீட்டுக்குள் கொல்லப்பட்டு கிடந்தனர்.

man jailed for killing and abusing his affairs daughter

பாண்டியம்மாளின் சொந்த ஊரான, காரைக்குடியில் அவரது கணவர் சின்ராஜூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தார்.  பின்னர்  அவர் அங்குள்ள ஸ்வீட் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது, உதயன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. உதயனோ, ‘நான் உங்களையு உங்கள் மகளையும் பார்த்துக்கொள்ள உதவுகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து, அனைவரும் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை பழைய போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் வீடு எடுத்து குடும்பமாக வாழத் தொடங்கினர். ஊராரைப் பொருத்தவரை பாண்டியம்மாளின் காதலரான உதயனே, பாண்டியம்மாளின் கணவரின் பெயரான சின்ராஜ் பெயரில், பாண்டியம்மாளின் மகள்களுக்கு அப்பாவாக வாழத் தொடங்கினார்.

சென்னையில் ஒரு ஸ்வீட் கடைக்கு ஸ்வீட் சப்ளை செய்துவந்த உதயன், பாண்டியம்மாளின் குடும்பச் செலவுக்கும் பணம் கொடுத்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாண்டியம்மாளின் பருவ வயது மகள்களின் ஒரு மகளை திருமணம் செய்வதற்கு உதயன் என்கிற சின்ராஜ் கேட்டுள்ளார். இதனால் அதிர்ந்த பாண்டியம்மாள் உதயனை சண்டை போட்டு விலக்கிவைத்தார். ஆனாலும் வீட்டு வாசலிலேயே வாழ்ந்து வந்த உதயன், திடீரென ஒருநாள் வீட்டுக்குள் நுழைந்து பாண்டியம்மாளையும் அவரது மகள்களையும் உலக்கையால் அடித்துக் கொன்றதோடு, அவரது மகள்களின் சடலங்களுடன் உடலுறவு கொண்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

அந்த சமயத்தில் பாண்டியம்மாளின் தந்தை, தன் மகள் மற்றும் பேத்திகளைக் கொன்ற உதயனை தூக்கில் போடச் சொல்லி ஆவேசமாக பேசினார். இந்த நிலையில், உதயனுக்கு தற்போது 4 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

Tags : #SEXUALABUSE #CHENNAI #VERDICT #MURDER