‘இது ஒன்னு போதும் இந்தியாவை ஜெயிக்க’.. பீதியை கிளப்பிய நியூஸிலாந்து வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 12, 2019 05:08 PM
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து நியூஸிலாந்து அணியின் வீரர் ஃபெர்குசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை லீக் சுற்றின் நாளை(13.06.2019) நடைபெறும் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் நியூஸிலாந்து அணியும் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட வகுத்த வியூகம் குறித்து நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘இந்திய அணியியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகின்றனர். இதனால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்தால், ஆட்டம் எங்கள் பக்கம் திரும்ப வாய்ப்பு உள்ளது. போட்டி நடைபெறும் டிரெண்ட் ப்ரிட்ஜ் மைதானம் பவுன்சர்களுக்கு சாதகமாக இருக்கும். இதற்கு முன்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பவுன்சர்களை வீசியதை கவணித்தோம். அதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்களும் பவுன்சர்களை உபயோகிக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
