உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 20, 2020 02:53 PM

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

UttarPradesh CM Yogi Adityanath’s father passes away

உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தந்தை ஆனந்த் சிங் சில நாட்களாக உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்ததால் செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டிருந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 10:44 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என உத்தரப்பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் அவனிஸ் கே.அவஸ்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங்கின் இறப்பிற்கு பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.