‘10 நாளா எதுவும் சாப்பிடல’.. இறக்கும் ‘கோழிக்குஞ்சுகள்’.. ‘எங்களுக்கு வேற வழி தெரியல’.. பண்ணையாளர்கள் வேதனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் அருகே பசியால் இறக்கும் நிலையில் உள்ள கோழிக்குஞ்சுகளை உயிருடன் புதைக்க முடிவு செய்துள்ளதாக பண்ணையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த டி.கே.என் புதூர், ரூக்குவார்பட்டி, அமரபூண்டி, எரமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் சிறிய ஷெட் அமைத்து கோழிப்பண்ணைகள் வைத்துள்ளனர். இவற்றில் லட்க்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோழிகளுக்கு வழங்கவேண்டிய தீவினங்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக கோழிக்குஞ்சுகளுக்கு தீவினம் வழங்காததால், கோழிக்குஞ்சுகள் ஒவ்வொன்றாக இறந்து வருவதாக பண்ணையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கோழிக்குஞ்சுகளை என்ன செய்வதென்றே தெரியாமல், இறந்த கோழிகளுடன் சேர்த்து உயிருடன் உள்ள மற்ற ஆயிரக்கணக்கான கோழிகளையும் புதைக்க முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
