"வயித்த பொரட்டிக்கிட்டு வருது! இந்த மாதிரி அருவருப்பா உணர்ந்ததில்லை!".. 'சர்ச் முன் போஸ் கொடுத்த டிரம்ப்!' - விளாசும் வெள்ளை மாளிகை அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்திவிட்டு புனித ஜான் சர்ச்சின் முன்னால் நின்று தன் கையில் பைபிளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதனால் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி உட்பட பலரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்திற்கு எதிராக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அப்படித்தான் பெயர் கூற விரும்பாததாகக் கூறி வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவரின் விமர்சனம் இணையத்தை புரட்டிப் போட்டு வருகிறது. அதில், “நான் என்றுமே இப்படி அவமானமாக உணர்ந்ததில்லை. அருவருப்படைந்ததில்லை. தற்போது வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் அவர்கள் தாங்களே கொண்டாடிக் கொண்டும், தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.
இதைக் கேட்ட பலரும் இது போன்ற விஷயங்களை எல்லாம் பெயருடன் வெளியிட வேண்டும் என்றும் அந்த அதிகாரிக்கு தெரிவித்தனர். ஆனால் அப்படி பெயர் வெளியிட்டால், அது வெள்ளை மாளிகையில் அவர் பணிபுரியும் வெள்ளை மாளிகையில் அவரது பணியின் கடைசி நாளாக இருக்கும் என்று கருதி சிலர் அவர் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை இரவு அதிபர் டிரம்ப், புனித ஜான் சர்ச்சின் முன் பைபிளுடன் போஸ் கொடுத்த நிகழ்ச்சியை தான் இப்படி பலரும் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
