'அதிகரிக்கும் கொரோனாவுக்கு மத்தியில்'... 'தமிழகத்திற்கு நல்ல செய்தி'... 'ஒரே நாளில் புதிய ரெக்கார்ட்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 10, 2020 05:05 PM

சுமார் 11 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் குணமடைவோர் சதவீதம் அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

After 11 days discharge rate going high in Tamil Nadu

கடந்த ஏப்ரல் 27-க்கு முன்பு வரை, அதாவது கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொற்று பரவுவதற்கு முன்னால் வரை தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் கிடுகிடுவென குணமடைந்து வந்தனர். டெல்லியிலிருந்து வந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரம் அது. ஏப்ரல் 12-ம் தேதி குணமடைவோர் சதவீதம் 4.65% ஆக இருந்தது. இரண்டு வாரத்தில், ஏப்ரல் 27-ம் தேதி 56.84% ஆக உயர்ந்திருந்தது. அன்று வரை 1101 பேர் குணமடைந்திருந்தனர்.

அதன் பிறகு கோயம்பேடு மார்க்கெட் தொற்று பரவல் காரணமாக பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதால் குணமடைவோர் சதவீதம் தொடர்ந்து சரிந்து வந்தது. வெள்ளிக்கிழமை 26.71% பேர் குணமடைந்திருந்தனர்.  நேற்று ஒரே நாளில் 219 பேர் வீடு திரும்பியதன் காரணமாக  1.2% அதிகரித்து 27.91 சதவீதமாக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 171 வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இத்தனை பேர் ஒரே நாளில் வீடு திரும்பவில்லை.