பையன் 'மனசு கஷ்டப்படும்' உண்மையை மறைத்த பெற்றோர்... அப்பா-அம்மாவை 'கொலை' செய்து... 'அதிர்ச்சி' கொடுத்த வாலிபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 30, 2020 10:15 PM

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த இரண்டு வருடமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் ரமேஷ் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.

Guy killed his parents and tied in a Sock makes shock

இந்நிலையில், நேற்றிரவு ரமேஷ் தனது தந்தை ராமசாமி மற்றும் தாய் செல்லம்மாள் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, இருவரது உடலையும் தனித்தனியாக சாக்கு மூட்டையில் கட்டி தனித்தனி அறையில் வைத்து விட்டு, பின் வீட்டின் மாடிக்கு சென்று அரிவாளுடன் அமர்ந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து இன்று காலை தனது வீட்டின் வழியே சென்ற பொதுமக்களை பார்த்து, 'வீட்டில் யாரவது காலை வைத்தால் யாராக இருந்தாலும் வெட்டுவேன்' என அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார், ரமேஷிடம் பேச முயன்ற போது அரிவாளை காட்டி போலீசாரையும் வெட்டி விடுவேன் என மிரட்டியுள்ளார். அருகிலுள்ளமாடி வழியாக ஏறி, ரமேஷை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னர் இறந்து போன இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனப்பிரச்சனையில் தவித்து வந்த ரமேஷ், தன்னுடன் மனைவியை சேர்த்து வைக்க தனது பெற்றோர்களிடம் கூறி வந்துள்ளார். அவர்களும் அந்த பெண்ணிடம் பேசிய நிலையில் ரமேஷுடன் இணைந்து ஒருபோதும் நான் வாழப் போவதில்லை என அந்த பெண் கோரியுள்ளதாக தெரிகிறது. இதனை ரமேஷிடம் பெற்றோர்கள் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில் தனது பெற்றோர்கள் வேண்டுமென்றே தான் தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்கவில்லை என நினைத்து கோபத்தில் பெற்றோர்களை வெட்டிக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வைத்த தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.