'ஓடும் ரயிலில் இறங்க முயற்சி'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 08, 2019 05:52 PM

விருதுநகர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இறங்க முயன்ற இளம் பெண் ரயிலில் சிக்கி இருகால்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young girl fell down in virudhunagar railway track, injured

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் 20 வயதான காவ்யா. தற்போது செங்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் குடும்பமாகச் சென்று ரயிலில் சாவிக்கொத்து போன்றவை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மும்பையிலிருந்து நெல்லை நோக்கி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காவ்யா மதுரையில் ஏறினார்.

அவர் விருதுநகர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டியதால், ரயிலை நிறுத்தும் முன்னரே இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையில் அவர் சிக்கினார். ரயில் நின்ற உடன் அருகில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணை ரயில்வே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு  முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

ரயில் மற்றும் பிளாட்பாரத்திற்கு இடையில் சிக்கி பெண்ணின் இரு கால்களும் சிதைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இளம்பெண் விபத்துக்குள்ளான சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்த மக்களை, பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #NELLAI