'ஆசையாக சென்றவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்'... '3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 30, 2019 12:18 PM

கோவை அருகே கண்டெய்னர் லாரி மீது ஆம்னி கார் மோதியதில், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car accident in coimbatore 5 died, 7 injured

கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. இதனைக் காண கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் ஆம்னி வேன் ஒன்றில், ஆசையாக பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷாஜகான் என்பவர் வேனை ஓட்டினார். இந்நிலையில் தமிழக எல்லையான வாளையாறு பகுதியைக் கடந்து, கேரளாவில் உள்ள வட்டப்பாரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தை இயக்கி வந்த முகமது ஷாஜஹான், 3 குழந்தைகள் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் வேனில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பாலக்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த காயமடைந்த இரு குழந்தைகள் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #COIMBATORE