'ஒரு நொடில எல்லாம் போச்சு'... 'சாலையை கடந்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்'...'சிசிடிவி காட்சிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 03, 2019 02:52 PM

பெட்ரோல் போட்டுவிட்டு சாலையை கடக்க முயன்ற பெண் மீது, தனியார் பேருந்து மோதிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CCTV footage of Private Bus and Two wheeler accident in Ramnad

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் இயங்கிவரும் பெட்ரோல் பங்க் ஒன்றில், பெண் ஒருவர் பெட்ரோல் நிரப்ப வந்தார். பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயற்சித்தார். அது மிகவும் பிரதமான சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இதனிடையே சாலையை கடக்க முயற்சித்த பெண் மீது, வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து அந்த பெண் தூக்கி வீசப்பட்டார். பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து கீழே இறங்கி நநின்றது.

இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள். சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்க்காமல் சென்றதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனிடையே இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CCTV #RAMNAD