'மினி வேனும், பேருந்தும் மோதி கோர விபத்து'... '12 பேர் பலியான சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 03, 2019 04:30 PM

தனியார் பேருந்து-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

12 killed in road accident in Karnataka 20 injured

கர்நாடகா மாநிலம், சிக்பல்லாபூர் மாவட்டத்தில் சிந்தாமணி அருகே உள்ள முருகுமல்லாவில், தனியார் பேருந்து வந்துக்கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக, தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மினி வேனில் சென்றவர்கள் அனைவரும் முருகமல்லாவில் உள்ள தர்கா நோக்கி சென்றுக்கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிக்பல்லாபூர் துணை ஆணையர் அனிருத் சரவன், காவல் கண்காணிப்பளர் சந்தோஷ் பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள், படுகாயமடைந்த 20 பேரை மீட்டு சிந்தாமணி மற்றும் கோலாரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 12 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தக் கோர விபத்து காரணமாக சிந்தாமணி நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #BUS #KARNATAKA