'வேன் கவிழ்ந்து விபத்து'... 'பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jun 27, 2019 12:28 PM
பள்ளி மாணவ - மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு பல்வேறு இடங்களில் இருந்து, தனியார் வேன்கள் மூலம் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில் 30 மாணவ - மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த மாணவ - மாணவிகள் அனைவரும் காயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பவுஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வேன் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags : #INJURED #VAN #ACCIDENT
