'காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி நேர்ந்த சோகம்'... ‘தலைகீழாக கார் கவிழ்ந்து 5 பேர் பலி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 08, 2019 10:17 AM

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்தில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car and bus accident near nellai 5 dead one more injured

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் தொழில் தொடர்பாக கன்னியாகுமரி சென்றுவிட்டு, இரவில் நெல்லையில் உள்ள குற்றலாத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.  இதேபோல் பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி தனியார் பேருந்து புறப்பட்டு வந்தது. பேருந்தில் சுமார் 65-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பஸ் பத்தமடை- கொழுமடை இடையே பறையன்குளக்கரை வளைவில் வந்தபோது காரும் பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கினர். இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த அருள்மணி என்பவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #NELLAI