‘50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து கோரவிபத்துக்குள்ளான பேருந்து’.. 29 பேர் பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 08, 2019 08:50 AM

டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

29 dead after bus carrying 40 skids off Yamuna Expressway

லக்னோவில் இருந்து டெல்லிக்கு பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இன்று காலை யமுனா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. காலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்துள்ளனர்.

பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 29 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுளது. மேலும் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Tags : #ACCIDENT #YAMUNA EXPRESSWAY #BUS #DEAD