‘நொடியில் நடந்த பயங்கரம்..’ பேருந்துக்கு அடியில் சிக்கிச் சிதைந்த கார்.. சிகிச்சைக்குச் சென்றபோது நடந்த பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 02, 2019 11:24 AM

விருதுநகர் அருகே அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த கார் ஒன்று மோதியதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 dead in government bus car accident near Virudhunagar

விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே நின்றுகொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் மெதுவாக இயக்க ஆரம்பித்துள்ளார். அப்போது மதுரையிலிருந்து நெல்லை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளது. இதில் அந்தக் கார் பேருந்தின் அடியில் சிக்கி நொறுங்கியுள்ளது.

அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சேகர், கமலம், சுப்பிரமணியன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரை ஓட்டிவந்த ஓட்டுநர் அய்யப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்துப் பேசிய போலீஸார், “பொள்ளாச்சியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மருத்துவ சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு காரில் வந்துள்ளனர். அய்யப்பன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : #ACCIDENT #VIRUDHUNAGAR