'இப்படி ஒரு வயசான காலத்துலயா.. ?'.. ’எந்த பெற்றோருக்கும் இந்த நிலை வரக்கூடாது'.. உருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 08, 2019 05:26 PM

வீட்டில் இருந்து வெளியே போகச் சொல்லி, தங்கள் மகனும் மருமகளும் துன்புறுத்துவதாக 68  வயதுடைய (இருவருக்கும் ஒரே வயதுதான்) தம்பதிகள் ஆன்லைனில் முன்வைத்த வேண்டுகோள் பலரையும் பதற வைத்தது.

children Throw Parents from the House they built,Video

மத்தியப் பிரதேசத்தில் வசித்துவரும் இந்தத் தம்பதியரை, பெற்றோரென்றும் பாராமல், வீட்டை விட்டு வெளியேறுமாறு மகனும் மருமகளும் துன்புறுத்துவதாக உருகிய இந்த தம்பதியர் அந்த வீடியோவில்,  ‘நாங்கள் இருந்தாலும் செத்தாலும் எந்த கவலையும் படத் தயாராக இல்லாத எங்கள் மகனும் மருமகளும், நாங்கள் சம்பாதித்து கட்டிய வீட்டை விட்டு எங்களை வெளியேறச் சொல்கிறார்கள்’ என்று பதிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தனக்கு இதயப் பிரச்சனையும், தன் மனைவிக்கு மூட்டுப் பிரச்சனையும் இருக்கும் நிலையில், இருவரும் எங்கே செல்வது என்று, அந்த ஆண், தன் மனைவியுடன் சேர்ந்து உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டதோடு, கணவன் - மனைவி இருவரும் கலெக்டரிடமும் நேரடியாகச் சென்று முறையிட்டுள்ளனர்.

இதனை விசாரித்த காஸியாபாத் மாவட்ட கலெக்டர், இவர்கள் இருவரையும் மீட்டதோடு, தம்பதியரின் மகனுக்கும் மருமகளுக்கும், பெற்றோரின் பேரில் இருக்கும் வீட்டை விட்டு, 10 நாட்களுக்குள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு இவர்களின் மகனும் மருமகளும் ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.  கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

Tags : #PARENTS #SON #SAD #MADHYAPRADESH