‘தந்தை கண்முன்னே மகளுக்கு நடந்த பயங்கரம்..’ சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 03, 2019 07:31 PM

புதுச்சேரியில் பள்ளி மாணவி தந்தை கண்முன்னே சாலை விபத்தில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teen girl crushed to death by bus in Pondicherry

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த திவ்யா டியூசன் முடிந்து நேற்று இரவு 8.30 மணியளவில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். முதலியார்பேட்டை கடலூர் ரோட்டில் சென்ற போது சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் பின்னால் அமர்ந்திருந்த திவ்யா தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பஸ்ஸின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்க, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளார். தந்தை கண்முன்னே மகளுக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் ஒன்று சேர்ந்து தனியார் பஸ் டிரைவரை சுற்றிவளைத்துப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் சாலைமறியல் செய்த அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள முதலியார் பேட்டை போலீஸார் பஸ் மீது கல்வீசி தாக்கிய ஓதியம்பட்டை சேர்ந்த சந்துரு உள்பட 4 பேர் மீதுவழக்குபதிவு செய்து தேடிவருகிறார்கள்.

Tags : #ACCIDENT #PONDICHERRY