மலையில் இருந்து பேருந்து கீழே விழுந்து கோரவிபத்து..! 33 பேர் பலியான சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 01, 2019 12:06 PM

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து ஒன்று மலையில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Bus falls into gorge several dead in Jammu & Kashmir

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கெஷ்வான் என்ற பகுதியில் இருந்து கிஷ்வார் என்ற இடத்துக்கு இன்று காலை பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது கிஸ்த்வார் என்ற பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் மலையில் இருந்து கீழே விழுந்து பேருந்து நொறுங்கியுள்ளது. உடனே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்கள மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 -க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகமாககூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அம்மாநில முதலமைச்சர் மெக்பூபா மஃப்டி ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Tags : #ACCIDENT #JAMMUKASHMIR #BUS