'நீயா இந்த காரியத்த செஞ்ச ஜான்சி'...'வெறுத்து போன கணவர்'...தூத்துக்குடியில் நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொந்த வீட்டிலேயே மனைவி திருடியதால் மனமுடைந்த கணவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வருபவர் வின்சென்ட். துறைமுக ஊழியரான இவர், தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காலையில் ஜான்சி தூங்கி எழுந்த போது, பீரோ கதவு திறந்து கிடந்ததாகவும், அதிலிருந்த 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஊரடங்கு நாளில் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பானது.
இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரித்து வந்த காவல்துறையினர், அங்கிருந்த தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். அப்போது ஜான்சி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வின்சென்ட்டின் மனைவி ஜான்சியிடம், கிடுக்குபிடி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தான் நகைகளை திருடி அதனை மறைத்து வைத்திருந்ததை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட ஜான்சி அன்றைய தினமே சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கடும் மன உளைச்சலில் இருந்த வின்சென்ட், மனைவிடம் நீயா இப்படி ஒரு காரியத்தை செய்தாய் என விரக்தியில் புலம்பியுள்ளார். ஒரு கட்டடத்தில் மனமுடைந்த அவர், வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சொந்த வீட்டிலேயே மனைவி திருடிய நிலையில், அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
