"மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற டிவி தொகுப்பாளினி!"..'இளைஞர்களின்' இன்ஸ்பிரேஷனாக மாறி 'சாதனை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் கமிஷனராக இருந்த சரவணகுமார் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரியான ஆஷா அஜித், புதிய நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த, ஆஷா அஜித், கேரள அரசின் கல்வித் தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனலில் பணியாற்றியவர் என்பதும், அந்த சேனல் மூலமாக இவர், மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல், கல்வியாளர்களிடம் நேர்காணல் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தவர் என்பதும் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அதன் பின்னர் கடந்த 2015 ஜூலை 4-ம் தேதி, சிவில் தேர்வில் 40-வது ரேங்கில் வெற்றிபெற்ற இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சப்-கலெக்டராகப் பணிபுரிந்துவிட்டு, பின்னர் விடுமுறையில் இருந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
இவரது கணவர் விஷ்ணு சந்திரன், கடந்த ஆண்டு நாகர்கோவில் சப்-கலெக்டராகப் பணிபுரிந்து வந்தவர். இப்போது அவர் தூத்துக்குடியில் பணிபுரிந்து வருகிறார். ஆஷா அஜித்தின் தந்தை அஜித் குமார், கேரள மாநில தகவல் மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநகராக இருந்து ஓய்வுபெற்றவர் என்பதும் ஆஷா அஜித், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பேசிய ஆஷா அஜித், “இப்பதான் நாகர்கோவிலுக்கு வந்துருக்கேன். முழுமையாக இவ்வூரை புரிந்துகொள்ளவும், வளர்ச்சிப்பணிகளை மேம்படுத்தவும் முனைவேன். முதற்கட்டமாக எனது பிரதான பணி, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பு பணிகளை செவ்வனே செயல்படுத்துவதுதான்” என்று தெரிவித்துவிட்டு பணியைத் தொடர்ந்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
