பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய ‘காசி’ விவகாரம்.. நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் ‘அதிரடி’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிய காசி விவகாரம் தொடர்பாக நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் முக்கிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். காசியால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காசி தொடர்பான வழக்குகளில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
