போலீஸ் தொப்பியுடன் 'இளம்பெண்ணின்' மடியில்... 'லேட்டஸ்ட்' புகைப்படத்தின் 'பதற' வைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 14, 2020 11:37 PM

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த காசி என்பவர் சென்னையை சேர்ந்த இளம்பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவரும் புகாரளித்தார்.

Kasi photo with police Cap released and goes viral

பின்னர் குண்டர் சட்டத்தில் காசி கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது போன்று பல பெண்களை மிரட்டி பணம் பிரித்த தகவல் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, காசி பெண்களை மிரட்டும் ஆடியோக்களும் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது போலீஸ் அதிகாரி ஒருவரின் தொப்பியை காசி அணிந்து கொண்டு இளம்பெண் ஒருவரின் மடியில் படுத்து கிடக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக விசாரணையில் காசி, போலீஸ் அதிகாரி ஒருவரின் மகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல் அந்த அதிகாரியின் வீட்டிற்கும் காசி அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அந்த சமயத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர். இதே போன்று அந்த போலீஸ் அதிகாரியின் மகளுடன் சில புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு அந்த பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணையும் புகாரளிக்க போலீஸ் தரப்பில் அழைப்பு விடுத்ததாகவும் அந்த போலீஸ் அதிகாரி மறுத்து வருவதாகவும் தெரிகிறது.