'கண் இமைக்கும் நேரத்தில்'... ‘கடை முன்பு பெண் செய்த காரியம்'... 'அதிர்ச்சியடைய வைத்த சிசிடிவி காட்சி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 19, 2019 07:57 PM
சென்னையில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பெண் ஒருவர், திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த நாகூர் மீரான் என்பவர், தனது மகன் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடிக்கு வந்துள்ளார். அங்கிருந்த கடைக்கு முன்பு, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர், மறதியாக வண்டியிலிருந்த சாவியை எடுக்காமல் அருகிலிருந்த துணிக்கடைக்கு சென்றுள்ளார். இதனை அவ்வழியாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பெண் கவனித்துள்ளார்.
இதையடுத்து சில நிமிடத்தில் நடந்து வந்த அந்த பெண், நாகூர் மீரானின் இருசக்கர வாகனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றுள்ளார். திரும்பி வந்த நாகூர் மீரான் தனது, இருசக்கர வாகனம் காணததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, அந்த பெண் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள், அங்கிருந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக நாகூர் மீரான் அளித்த புகாரின் பேரில் வழக்கு செய்துள்ள பூந்தமல்லி காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். பைக் திருட்டுச் சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், `கரையான்சாவடிக்கு வந்த நாகூர்மீரான், பைக்கை கடையின் முன் நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் உள்ளே சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட நீலநிற சுடிதார் அணிந்தபெண், எளிதாக பைக்கை திருடிச் சென்றுள்ளார். அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரின் முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை.
இருப்பினும் அவர் சென்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம், அதே நேரத்தில் இளம்பெண், ஞாபக மறதி காரணமாக தவறுதலாக நாகூர் மீரானின் பைக்கை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, அந்த இளம்பெண் வந்த பைக் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதா எனவும் விசாரித்துவருகிறோம்’ என்றனர்.