‘தங்க கம்மலை விழுங்கிய கோழி’.. ஆபரேஷன் செய்த மருத்துவர்கள்..! சென்னையில் நடந்த சோக சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 09, 2019 12:19 PM

சென்னையில் ஆசையாக வளர்த்த கோழி தங்க கம்மலை விழுங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

A hen died on swalloing gold ear ring in Chennai

சென்னை புரைசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஒரு கோழியை வாங்கியுள்ளார். அதற்கு பூஞ்சி என பெயர் வைத்து குழந்தை போல் வளர்த்துள்ளார். அவரது அக்கா மகள் தீபா என்வரிடம் கோழி பாசமாக இருந்துள்ளது. தீபா வீட்டில் எங்கு சென்றாலும் அவர் கூடவே வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தீபா தனது கம்மலைக் கலட்டி வைத்துவிட்டு தலைவாரிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே இருந்த கோழி கம்மலை கொத்தி விழுங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தீபா, உடனே வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கோழிக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் கம்மல் இரைப்பையில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து தனக்கு கம்மல் முக்கியமில்லை கோழியின் உயிர்தான் முக்கியம் என தீபா கூறியுள்ளார். இதனால் கோழிக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து இரப்பையில் சிக்கியிருந்த கம்மலை அகற்றியுள்ளனர். ஆனால் கோழி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தைபோல் வளர்த்த கோழி இறந்ததால் சிவக்குமாரும் அவரது குடும்பதினரும் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளோரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Tags : #CHENNAI #GOLD #CHICKEN