‘குளக்கரையில் சிதைக்கப்பட்ட நிலையில்’ கிடைத்த சடலம்.. ‘ஆணுக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 15, 2019 11:59 AM

காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் தலை சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man brutally murdered by gang in money problem near kanchipuram

காஞ்சிபுரம் மதுராந்தகத்துக்கு அருகே குளக்கரையில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்த நபர் நடக்க முடியாதபடி இரு கால்களும் வெட்டப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஹைட் வேலு என்பது தெரியவந்துள்ளது.

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு காலனியில் வசித்து வந்த வேலு மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்ற நிலையில், அவர் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பிரபல தொழில் அதிபர் ஒருவரின் பணத்தை கொள்ளையடித்த வழக்கு ஒன்றில் வேலு கடந்த ஆண்டு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்து தற்போது தொழில் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் கொள்ளையடித்த பணத்தில் வசதியாக வாழ்ந்து வந்த வேலு மீதான ஆத்திரத்தால் சம்பந்தப்பட்டவர்கள் கூலிப்படை ஏவி அவரைக் கொலை செய்திருக்கலாம் அல்லது கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : #CHENNAI #KANCHIPURAM #VCK #POLITICAL #PARTY #BRUTAL #MURDER