‘சென்னையில் வாக்கிங் போனவருக்கு நடந்த கொடூரம்’.. ‘5 மணி நேரத்தில் போலீசார் காட்டிய அதிரடி’.. சினிமாவை விஞ்சிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 12, 2019 12:47 PM

சென்னையில் செல்போனை பறித்து சென்ற கொள்ளையனை 5 மணிநேரத்தில் கைது செய்து போலீசார் அசத்தியுள்ளனர்.

Chennai police arrested the cell phone snatcher within 5 Hours

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி (56) என்பவர் நேற்று காலை பாண்டிபஜார் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நபர் சேஷாத்திரியின் செல்போனை பறித்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் செல்போனை பறித்து சென்ற மர்ம நபரின் பைக் பதிவுஎண் தெரிந்துள்ளது. இதனால் அந்த எண்ணின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அது திருட்டு பைக் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பைக் திருடர்கள் பதுங்கி இருக்கும் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அப்போது செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் அமைந்தகரை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட பாட்ஷா என்ற நபரை கைது செய்துள்ளனர். புகார் அளித்த 5 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Tags : #POLICE #TAMILNADUPOLICE #CHENNAI #CELLPHONE #SNATCHER #ARRESTED