BGM Shortfilms 2019

'பேங்க் ஆஃபீசர் வேலைன்னு நம்பி போனோம்'...'இப்போ எல்லாம் போச்சு'...சென்னை இளைஞர்கள் பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 14, 2019 12:31 PM

சென்னையில் வங்கி பணி என்று இளைஞர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு சம்பளம் வழங்காமல் மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. 

Fake Job racket busted in Chennai

இந்த சம்பவம் தொடர்பாக பாலிமர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், டிஜிட்டல் பேங்கிங் இந்தியா  என்ற தனியார் நிறுவனம் கோடம்பாக்கம் , போரூர் உள்பட 4 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை பிரவீன், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இதனிடையே வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், வங்கியில் வேலை என்று தரகர்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டதன் மூலமாக 1000 இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்கள்.

வங்கிகளின் கணினி சேவைகளை ஒப்பந்தம் எடுத்து தங்கு தடையின்றி வழங்குவதுதான் இவர்களுக்கான பணி என்று, ஆபரேசனல் எக்சிகியூட்டிவ் என்ற பெயரில் வேலைக்கு சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு அடையாள ஆட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது மத்திய அரசு பணி என்று கூறி 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தரகர்கள் மூலம் வசூல் செய்ததாக பட்டதாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் சிலரிடம் முன் பணம் பெறாமல் வேலைக்கு சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் வேலைக்கு சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் தரவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த பட்டதாரி இளைஞர்கள், தங்கள் பணியை புறக்கணித்து விட்டு கோடம்பாக்கம் அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே வேலை வாங்கி கொடுப்பதாக கூறி லட்சங்களை பறித்துக் கொண்ட இடைதரகர்கள் மீதும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : #JOBS #CHENNAI #DIGITAL BANKING INDIA #JOB RACKET