‘சென்னையில் காவலரின் பகீர் முடிவால்’... 'மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்’... ‘பரிதவிக்கும் 7 வயது குழந்தை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 19, 2019 09:12 AM

சென்னையில் மனைவியை கொலை செய்த காவலர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

chennai police killed his wife and commited suicide

சென்னை புழல் அடுத்த புத்தகரம் திருமால் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் 39 வயதான நரேஷ். இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயஸ்ரீ என்பவருடன்  திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு வருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர்களுடைய மகன் வருண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, நடன வகுப்புக்கு சென்றிருந்தார்.

அப்போது, இரவு 9 மணியளவில் கணவன், மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த காவலர் நரேஷ், தனது மனைவி ஜெயஸ்ரீயை கத்தியால் குத்தி கொலை செய்ததாகத் தெரிகிறது. பின்னர் மனைவியின் துப்பாட்டாவால், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, இருவரின் சடலத்தை கைப்பற்றி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி இடையே என்ன பிரச்னை என்பது குறித்து போலீசார் அப்பகுதியில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விபரீத முடிவால், 7 வயது குழந்தை தாய், தந்தையை இழந்து நிற்பது அப்பகுதி மக்களிடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #CHENNAI