'ஆமா... அப்படியே விசாரிப்பீங்க.. இன்னும் நிறைய ப்ளான் வெச்சிருப்பீங்க.. தெரியாதா?’.. வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Aug 19, 2019 06:11 PM

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது ஆட்டம்தான் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

yuvraj response to akhtars tweet about smith injure

காரணம் மீண்டும் ஃபுல் ஃபார்மில் ஆடும் ஸ்டீவ் ஸ்மித்தின் மரண மாஸான ஸ்கோர்தான். அவரது ரன் ரேட் இப்படி ஒரு புறம் எகிறிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அவர் மீது ஆர்ச்சரின் பந்து எகிறியது. ஆம், 92 ரன்களில் அவுட் ஆகிய ஸ்மித்துக்கு ஆர்ச்சர் பந்து வீசும்போது பந்து கழுத்தில் பட்டு, கழுத்தை பதம் பார்த்தது.

ஆனால் வலியில் ஸ்மித் துடித்துக்கொண்டிருந்தபோது, ஆர்ச்சரும் பட்லரும் அதை பார்த்து மெலிதாக சிரித்து பேசிக்கொண்டிருந்த வீடியோ அனைவரிடத்திலும் பரவி, விமர்சனத்துக்குள்ளாகியது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ட்வீட்டில், கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் மீது பவுண்சர் வீசும் பந்து தாக்குவது சகஜம்தான் என்றாலும், பந்து வீச்சாளர் பேட்ஸ்மேனை சென்று எப்படி இருக்கிறது என்ன ஆச்சு என்று விசாரிக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருந்தது ஆர்ச்சரின் தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,  ‘ஆமாம், நீங்க ஓடிவந்து அப்படியே விசாரிப்பீங்க. இப்ப எப்படி இருக்குனு கேப்பீங்க. ஆனாலும் இன்னும் பல பவுன்சர்களை வீச திட்டம் தீட்டியிருப்பீங்க. அதுக்காகதானே நலம் விசாரிக்கிறீங்க’ என்று பேசியுள்ளார். இந்த ட்வீட் வைரலாகியுள்ளது.

Tags : #STEVESMITH #YUVRAJSINGH