கீழ்வீட்டில் திருடியாச்சு... அடுத்து மேல் வீடு... 'செகண்ட் விசிட்' அடித்த கொள்ளையர்கள்...திணறும் போலீசார்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 06, 2020 12:58 PM

சென்னை அம்பத்தூர் அருகே ஒரே குடியிருப்பில் கொள்ளையர்கள் 2 முறை கொள்ளையடித்திருப்பபது குடியிருப்பு வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Robbery in the same apartment in Ambattur-Residents panic

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் வைஜெயந்திமாலா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் துபாயிலும், மகள் பெங்களூருவிரும் பணியாற்றி வருவதால் தனியாக வசித்து வருகிறார்.

அண்மையில் வைஜெயந்திமாலா பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறிதுநாட்கள் தங்கிவிட்டு நேற்று தனது வீட்டிற்க திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிலிருந்த பணம், நகை உள்ளிட்டவை கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் ஆணையர் விசாரணை நடத்தியதில், அடுக்கமாடி குடியிருப்பின் மாடியில் சூரிய ஒளி உள்ளே புகாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும்  ஷீட்டைக் கழற்றி, அதிலிருந்த பக்கவாட்டு பைப் வழியாக நுழைந்து, திறந்து மூடும் வகையிலான பாத்ரூம் ஜன்னல் வழியாக கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்திருப்பது தெரியவந்தது.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் 80 சவரன் தங்க நகைகள், பணம், வைர நகைகள் உள்ளிட்டவை கொள்ளை போயிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதே அடுக்குமாடிக் குடியிருப்பில் 3 மாதங்களுக்கு முன் ஏற்கெனவே ஒரு கொள்ளைச் நடைபெற்ற நிலையில், கொள்ளையர்கள் மீண்டும் ஒரு விசிட் அடித்திருப்பது குடியிருப்புவாசிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ROBBERY #APPARTMENT #RESIDENTS PANIC #POLICE ACTION