போலீஸ் தடுப்புக் கம்பியை வைத்து ‘வாலிபால்’ விளாட்டு!.. கொரோனா ஊரடங்கு சூழலில் இளைஞர்கள் செய்த ‘சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுரையின் சாலைகளில் போலீசாரின் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மதுரையில் பரபரப்பாக இயங்கும் முக்கியமான சாலையான காமராஜர் சாலையில் போலீசாரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு முழு கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட அந்த சூழலை பயன்படுத்தி, மதுரை முனிச்சாலை என்கிற பகுதியில் 20 வயதான நாகராஜ் என்பவரும் 17 வயதான சிறுவர் ஒருவரும் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்பினை பயன்படுத்தி வாலிபால் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, பல கட்டுப்பாடுகள் எல்லாம் விதித்து இப்படி போலீசார் தடுப்பு வைத்திருந்தால் அந்த கட்டுப்பாடுகளை கேலியாக்கி அவ்வழியாக இயங்கிய அத்தியாவசிய வாகன போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக செயல்பட்டு, இவ்வாறு வாலிபால் விளையாடிய அந்த இளைஞர்களின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இதனை அடுத்து இதுகுறித்து அப்பகுதியில் சென்ற தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து ஊரடங்கை மதிக்காமல் அலட்சியமாக திரிந்த அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.