'ஒழுங்கு மரியாதையா மொபைல கொடு, இல்லன்னா...’ ‘கடுப்பான கணவன் செய்த கொடூரம்....’ கட்டி வைத்து தோலுரித்த பொதுமக்கள்…!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 09, 2020 08:35 PM

மும்பையில் போனைக் கேட்டு தர மறுத்த மனைவியைக் குடிபோதையில் பல இடங்களில் குத்திக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

A husband who killed his wife for not giving her cell phone

ஜேம்ஸ் ஜாண் குர்ரையா மற்றும் அவரது இரண்டாவது மனைவி ராபியா மேற்கு மும்பையில் உள்ள செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிறு அன்று இரவு குடித்துவிட்டு போதையுடன் வீடு திரும்பி உள்ளார் ஜேம்ஸ் ஜாண்.

குடிப்போதையில் உளறியவாறே ராபியாவின் செல்போனை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார் ஜேம்ஸ் ஜாண். செல்போனை தர மறுத்த ராபியாவிற்கும் ஜேம்ஸ்க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேசிக்கொண்டிருக்கும் போதே ஆத்திரமடைந்த ஜேம்ஸ் சமையல் அறையில் இருக்கும் கத்தியைக் கொண்டு வந்து ராபியாவை பல இடங்களில் பலமுறை குத்தியுள்ளார்.

ராபியாவின் அலறிவுடன்  தப்பி ஓட முயன்ற ஜேம்ஸை அக்கம் பக்கத்தினர்கையும் களவுமாக பிடித்துப் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே ராபியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வரும்  வரை அவரை கட்டி வைத்து அடித்து துவைத்தனர்.

இதற்கு முன்பே பல முறை அவருக்கும் அவரது மனைவி ராபியாவிற்கும் செல்போனால் பல முறை சண்டை ஏற்பட்டுள்ளது என அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

மேலும் ஜேம்ஸ் ஜாண் மீது இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Tags : #MOBILE