வயசாகிடுச்சு...அவரைத் தூக்கிட்டு 'இவருக்கு' வாய்ப்பு கொடுங்க... 'பிரபல' அணிக்கு ரசிகர்கள் கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 30, 2020 08:31 PM

ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கும் ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறவுள்ளன. கடந்த உலகக்கோப்பை போட்டிக்குப்பின் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. சமீபத்தில் பிசிசிஐ அறிவித்த வீரர்கள் காண்ட்ராக்ட் லிஸ்ட்டிலும் தோனி பெயர் இல்லை.

IPL 2020: Give a chance to Ruturaj Gaikwad, fans request CSK

எல்லாவற்றுக்கும் மேலாக அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் தோனி இடம்பிடிக்க வேண்டுமானால் அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட வேண்டும் என, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருக்கிறார். இதனால் தோனி ரசிகர்கள் இந்த ஐபிஎல் போட்டியை வெகு ஆவலாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த நிலையில் இளம்வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் சிகே நாயுடு டிராபியில் மஹாராஷ்டிரா சார்பாக 157 ரன்கள் அடித்துள்ளதை ட்விட்டரில் வெளியிட்டு சென்னை அணி பாராட்டி இருந்தது. அதில், '' நம்ம ருத்ராஜ் கெய்க்வாட் பஞ்சாப் அணிக்கு எதிராக 157 ரன்கள் அடித்துள்ளார் விசில்போடு,'' என கூறியிருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் போஸ்ட் மட்டும் தான் போடுவீங்க, டீம்ல வாய்ப்பு எதுவும் கொடுக்க மாட்டீங்க என்று கலாய்த்து வருகின்றனர்.

உச்சகட்டமாக ஒரு ரசிகர் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்சனுக்கு பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வாட்சனுக்கு சந்தடி சாக்கில் ஆப்பு வைத்திருக்கிறார். வரும் ஐபிஎல் தொடரில் ருத்ராஜ்க்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.